ஈஸ்டர் சூரிய உதயம் EASTER SUNRISE 56-04-01S பிரான்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில் இந்தியானா, அமெரிக்கா 1 ... கண்ணீரோடு விதைக்கிறவர்கள், கெம்பீரத்தோடே எழும்பி வருவார்கள். ஆமென். ஓ, நான் பிழைக்கிறபடியால் நீங்களும் பிழைப்பீர்கள். ஓ, என்னே, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அதைக் குறித்து எண்ணிப்பார்க்கக் கூடுமானால், 1900 வருடங்கள் உபத்திரவங்களையும், கடுமையான உழைப்பையும் மற்றவைகளையும் கண்ட பிறகு இந்தக் காலை வேளையில் நாம் அதை எவ்வளவு எண்ணிப் பார்க்க வேண்டும்; நாம் சரியாக உயிர்த்தெழுதலின் முன் வாசலுக்குள் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். ஆமென். உயிர்த்தெழுதலானது எந்த நேரமும் சம்பவிக்க முடியும் என்ற அளவுக்கு சபையானது இப்பொழுதுள்ள இந்த மணி நேரத்துக்கு சரியாக அசைக்கப்பட்டிருக்கிறது. அந்த நாளில் அது விசுவாசிகளாகிய நமக்கு எவ்வளவு முக்கியமாதாக இருக்கும் என்பதை நான் எண்ணிப்பார்க்கிறேன், அந்த நாளில் எவ்வளவு முக்கியமாதாக இருக்கும். 2. மார்த்தாளும் மரியாளும் அந்த கல்லறையண்டை போன அந்த அதிகாலை வேளையை என்னால் காண முடிகிறது... ஒரு இரவுக்குப் பிறகு அந்த மலைப்பிரதேசத்தின் பக்கத்தினூடாக அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அந்த ஏழைத் தாயாரின் இருதயத்தைக் குறித்து எண்ணிப்பாருங்கள். அவள் - அவளுடைய குழந்தை பிறந்த போது, ஆரம்பம் முதற்கொண்டு முடிவு வரையில், அது முறை தவறிப்பிறந்த பிள்ளை என்று அவர்கள் கூறினர், அது முற்றிலுமாக யோசேப்பை சேர்ந்ததல்ல, அது - அல்லது அது யோசேப்புடையதாக இருந்தது, அவர்கள்... அந்தக் குழந்தை பரிசுத்த விவாகத்திற்கு வெளியே பிறந்ததாகும். அவள் கடந்து செல்ல வேண்டிய எல்லாமும் அவளுக்கிருந்தது, உன்னுடைய குழந்தையைக் குறித்து எண்ணிப்பார், அது எவ்வளவாக புறக்கணிக்கப்பட்டும், ஜனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டும், துப்பப்பட்டும் இருந்தது, இருப்பினும் அவன் அதை உரிமைகோரினான். அதோ அங்கே சிலுவையில் அறையப்பட்ட அந்த மகத்தான மணி நேரத்தில் அவரைக் கண்டு, அவள் எப்படியேனும் தன்னுடைய நடுக்கமான இருதயத்தோடு, 'தேவன் அந்த குழந்தையை எனக்குக் கொடுத்தார், இது எப்படி சம்பவிக்க முடியும்?' என்று கூறினாள். அவர்கள் அவருடைய தலையில் முள்முடியை வைக்கும்படியாக சென்று, அவருடைய முதுகின் வழியாக இரத்தம் வெளியேறும் அளவுக்கு அவரை அடித்து, அவருடைய சரீரத்தின் மேற்பகுதியிலும் கீழ்பகுதியிலும் தழும்புண்டாக்கி இந்தக் காரியங்களை எல்லாம் செய்த சமயத்தில் அவள் நிச்சயமாக அவ்வாறு எண்ணினாள்; அவர் எந்த நேரத்திலும் அந்த சிலுவையைக் கீழே எறிந்து விட்டு, திரும்பி தம்முடைய கால்களை தரையில் மிதித்து (நின்று) விடுவார் என்றும், பூமியானது ஒரு பக்கம் முதல் மறு பக்கம் மட்டுமாக அதிர்ந்து பூமியதிர்ச்சி ஏற்பட்டு விடும் என்றும், அவர் யார் என்பதை வெளிப்படையாக பிரகடனப்படுத்துவார் என்றும் அவள் நிச்சயமாக எண்ணினாள். ஆனால் அவரோ பரிதாபமான தோல்வியுற்ற ஒரு குற்றவாளி சிலுவையில் தொங்குவதைப் போன்று அதோ அங்கே மரித்து விட்டிருந்தார். 3. அவர் அவமானத்தோடு மரித்திருந்தார். அவரைச் சுற்றிலும் வஸ்திரத்தை அணிந்துள்ள விதமான காட்சியை தான் நிச்சயமாக நீங்கள் காண்கிறீர்கள், அது தவறாகும். அவர்கள் எல்லா வஸ்திரங்களையும் அவரை விட்டு உரிந்து போட்டனர், வெறுமனே... அவரை உலகத்திற்கு முன்பாக அவமானப்படுத்தி, அவர்களால் செய்ய முடிந்த யாவற்றையும் செய்து, அவர்கள் அவரை சிலுவையில் ஆணியடித்தனர். அவர் உதவியற்றவராய் நின்று கொண்டிருப்பதாகக் காணப்பட்டது. (சிலுவையில் அறையப்பட்டவராய்) நின்று கொண்டிருந்தார், உலகத்திற்கு அவரைப் பிடிக்கவில்லை, பரலோகமும் அவரைக் கொண்டிருக்க முடியவில்லை, அவர் ஒரு பாவியாக இருந்தார். ஓ என்னே! நீங்கள் மாத்திரம் அதைத் தெளிவாக புரிந்து கொள்வீர்களானால், சற்று சிந்தித்துப் பாருங்கள், உலகமானது தன்னுடைய சிருஷ்டிகரை விரும்பவில்லை. பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஏனெனில் அவர் தம்மேல் பூமியினுடைய பாவங்களைக் கொண்டிருந்தார். அவர்களுக்கு ஒரு இடம் கூட இருக்கவில்லை... பிறப்பதற்கு ஒரு இடத்தைக் குறித்து பேசுகிறீர்கள், மரிப்பதற்கும் இடமில்லாதிருந்தது. அது சரியே. உலகம் அவரை விரும்பவில்லை. அவர்கள் புறக்கணித்து, 'அந்த மனிதனை அகற்றுங்கள்' என்றனர். பரலோகமும் அவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஏனெனில் அவர் ஏற்கனவே ஒரு பாவியாக இருந்தார். 4. ஓ, எப்படிப்பட்ட ஒரு இரட்சகர்! மகிமையிலிருந்து வந்து எனக்காக அவர் இரட்சகரானார். இப்படியிருக்க அவருக்கு சொந்தமானவர்களால் அவர் புறக்கணிக்கப்பட்டார், 'அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.' பிறக்கவும் இடமில்லை, மரிக்கவும் இடமில்லை. உலகமானது எதை விரும்பினது? அவரை நரகத்திற்குள் தள்ளுவதைத் தவிர அவர்களால் என்ன செய்யக் கூடும். ஆனால் அவரை நேசித்த யாரோ ஒருவர் அங்கே இருந்தார். 'அவருடைய ஆத்துமாவை நான் பாதாளத்தில் விடமாட்டேன், அவரை அழிவைக் காணவொட்டேன்.' ஆனால் அவர் அவரை கல்லறையை விட்டு உயிரோடு எழுப்பினார், அவர் ஈஸ்டர் காலையில் ஜெயத்தோடு வெளியே வந்தார். அல்லேலூயா! ஒவ்வொரு கட்டுகளையும், ஒவ்வொரு பயத்தையும், மற்றும் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து, மீண்டும் உயிர்த்தெழுந்து இன்றும் என்றென்றுமாய் ஜீவிக்கிறார். அவருடைய சமூகம் இங்கேயுள்ளது, ஆராதனையின் இந்தக் காலை வேளையில் அவர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார். இரண்டு பேரோ மூன்று பேரோ ஒன்று கூடுகிற இடத்திலும் அவர் விஜயம் செய்கிறார். நான் எவ்வளவு சந்தோஷமான இருதயத்தைக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். 'நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடு இருப்பேன்' என்று வேதாகமத்தில் அவர் பண்ணின அதே வாக்குத்தத்தங்களை நீங்கள் அறிவீர்கள். பரிதாபமானவர்களும், புறக்கணிக்கப் பட்டவர்களும், இந்த உலகத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களும் இன்னுமாக நம்மோடு அவருடைய பிரசன்னத்தைக் கொண்டிருக்க முடியும். அவர் சர்வவல்லவரும், எப்போதும் எங்கும் நிறைந்திருக்கிறவரும், சகல பிரசன்னரும், சகல வல்லமை நிறைந்தவரும், எல்லா நேரமும் எல்லா இடங்களிலும் இருப்பவருமாக இருக்கிறார். ஒவ்வொரு ஆபத்து வேளையிலும் அவர் எப்படியாக தப்பித்துக் கொள்ளும்படியான ஒரு வழியை உண்டுபண்ணுகிறார். 'நான் ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையாயிருக்கிறேன்' என்று அவர் கூறியுள்ளார். 5. இப்பொழுது, இந்தக் காலையில் அவர் ஜீவிக்கிறார். அவர் இன்று நம்மோடு கூட இருக்கிறார், நாம் இன்று ஒருவேளை வெறுமனே ஒரு சிறு சபையாக இருக்கலாம். நாம் ஒருவேளை வெறுமனே பலகைகளைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு பழைமையான சிறு கூடாரத்தை இங்கே கொண்டிருக்கலாம். காண்பதற்கு மிக அதிகமாக இல்லை; ஆனால் மிகத் தாழ்மையான இடத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் அவர் ஒருபோதும் வருவதில்லை. ஜீவிக்கிறவர்கள் மத்தியில் இன்று அவர் ஜீவனோடிருக்கிறார். அவர் மரித்தவராயில்லை, அவர் ஜீவிக்கிறார். அவர் ஜீவனுள்ளவர்கள் மத்தியில் ஜீவிக்கிறார். இன்று பாவியான நண்பரே, நீ பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்தவனாயிருந்தால், ஏன் பிழைக்கக் கூடாது? நீ ஏன் மரணத்தில் தரித்திருக்க வேண்டும்? ஏன்... மரணத்திலேயே தரித்திருப்பதால் உங்களுக்கு என்ன லாபமுண்டு? நீங்கள் ஏன் ஜீவனுக்குள் வரக்கூடாது? நீங்கள் ஏன் இன்று அவரோடு ஜீவிக்கக்கூடாது? இந்த மகத்தான ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையோடே, உங்களுடைய அன்பார்ந்தவர்களிடமிருந்து பிரிக்கும் மரணம் கூட உங்களிடமிருந்து கறையையோ, மாசு மறுவையோ (mar) அல்லது உங்களிடமிருந்து எதையும் ஒருபோதும் எடுத்துச் செல்ல முடியாது. என்னவொரு ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கை. அவருடைய உயிர்த்தெழுதலினிமித்தமாக நாம் இன்று கொண்டிருப்பது என்னவொரு அற்புதமான காரியமாக உள்ளது. அவர் ஜீவிக்கிறார், நாம் அவரோடு ஜீவிக்கிறோம், என்றோவொரு நாளில் அவர் வருவார், நாம் அவரோடு போவோம். 'நான் அவர்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறேன் என்று போய் என்னுடைய சீஷர்களிடமும், பேதுருவிடமும் சொல்லுங்கள்' என்றார். அவர் எப்போதுமே ஒரு வழியை உண்டாக்கும்படி நமக்கு முன்னே போகிறார். எந்த வழியும் இல்லாத இடத்திலும் அவர், 'நானே வழி. நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்' என்று சொன்னார். இன்று ஒருவேளை - இங்கே இன்று நாம் கூடியிருக்கையில்... நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், இன்றும் கிறிஸ்து இயேசு ஜீவிக்கிறார்! ஜீவியத்தின் இடுக்கமான பாதையினூடாக அவர் என்னோடு நடந்து வந்து பேசுகிறார். அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், இரட்சிப்பை அருளுகிறார்! அவர் ஜீவிக்கிறார் என்று எனக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம்; அவர் என்னுடைய இருதயத்திற்குள் ஜீவிக்கிறார். 6. அது அற்புதம் அல்லவா? இந்தக் காலை வேளையில் எத்தனை பேருக்கு இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கை உண்டு, உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? நிச்சயமாக. அந்த நம்பிக்கை இல்லாமல், 'போதகர் சகோதரனே, இந்தக் காலை வேளையில் இந்த சபையில் இருக்கும் நீர் நான் இந்த உயிர்த்தெழுதலின் காலையில் இங்கே உம்மோடு கூடியிருக்கிறேன், ஆனாலும் எனக்குள் அழிவில்லாத ஜீவன் இல்லை என்றும், இந்த நம்பிக்கை என்னுடைய மடிக்குள் இல்லை என்றும் நான் அறிவேன். இன்று நீங்கள் எல்லாரும் ஜெபத்திலே என்னை நினைவுகூர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இது எனக்குள் உயிர்த்தெழுதலாய் இருக்க வேண்டும் என்றும், என்னுடைய ஆத்துமா இந்த அற்புதமான நம்பிக்கைக்குள் உயிர்த்தெழும் என்றும், என்றோவொரு நாளில் மரண நேரத்தின் தலையணையை அழுத்துவேன் என்றும், எங்கோவுள்ள கல்லறைத் தோட்டங்களிலுள்ள ஒரு கல்லறையிலோ அல்லது கடலிலோ, அடக்கம் பண்ணப்படத்தான் வேண்டும் என்றும், அல்லது அடக்கம் பண்ணப்படுவதற்கான என்னுடைய இடம் எங்கேயாகிலும் இருக்கலாம்; ஆனால் நான் அந்த நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் என்னுடைய கரத்தை உயர்த்தி, நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்' என்றும் கூறி, அந்த நம்பிக்கை இல்லாமல் இருக்கிற ஒருவர் இங்கே உண்டா? அங்கே அப்படிப்பட்ட ஒரு நபர் உண்டா? ... இல்லாதிருக்கிறவர்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? அப்படியானால் நீங்கள் எல்லாருமே கிறிஸ்தவர்கள் தான் என்று நான் யூகிக்கிறேன். அது அற்புதமானது. நாம்... 7. நான் இன்று விசுவாசிக்கிறேன் - மீண்டும் திரும்பி வந்த பிறகு, சர்வவல்லமையுள்ள தேவன் இன்று இங்கே இந்த மேடைக்கு கர்த்தராகிய இயேசுவை அனுப்பி, இயேசு ஜீவிக்கிறார் என்றும், இன்று ஜனங்கள் மத்தியில் இருக்கிறார் என்றும், ஒரு சந்தேகத்தின் நிழலுக்கு அப்பால் உங்களுக்கு நிரூபிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென். அவர் இங்கே இப்பொழுது இருக்கிறார் என்பதை நான் அறிவேன். ஆமென். அவர் இங்கேயிருக்கிறார். அவர் ஜீவிக்கிறார். நாம் அவரைக் காண்கிறோம். நாம்... அவர் தோமாவிடம், 'என்னை ஒருபோதும் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவனுக்கு வரும் பலன் எவ்வளவு அதிகமாயிருக்கும்' என்றார். ஆமென். அவர் அற்புதமானவராயிருக்கிறார். 8. இப்பொழுது நாம் இதைப் பாடுவோம். சகோதரி கெர்ட்டி, அவர் ஜீவிக்கிறார் என்ற பாடலுக்கான இசைத்தந்தியை எங்களுக்குத் தாருங்கள். இக்காலை வேளையில், அந்தப் பாடலை நான் கேட்க விரும்புகிறேன். ஓ, துக்கங்களையும், கஷ்டங்களையும் நாம் காண்கிறோம், கிரயம் என்னவாயிருந்தாலும், இப்பொழுது, அதெல்லாம் முடிந்து விட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லேலூயா. பகல் வெளிச்சம் வந்திருக்கிறது. நரகமானது (sheol) முடிந்து விட்டது. இனிமேலும் பாதாளம் கிடையாது. மரணத்தின் மேல் அதிகாரம் உண்டு. எல்லா அந்தகாரமும் மறைந்து விட்டது. நாம் ஜீவிக்கிறோம். ஆமென். நாம் ஜீவிக்கிறோம், அவரும் ஜீவிக்கிறார். அவர் ஜீவிக்கிறார், நாம் அவருக்குள் ஜீவிக்கிறோம். ஆமென். இப்பொழுது எல்லாரும் ஒன்றுசேர்ந்து (பாடுவோம்): அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், கிறிஸ்து இயேசு இன்றும் ஜீவிக்கிறார்! ஜீவியத்தின் இடுக்கமான பதைகளினூடாக அவர் என்னோடு நடந்து கொண்டே பேசுகிறார். அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், இரட்சிப்பை அருளுகிறார்! எனக்கு எப்படித் தெரியும்... என்று நீங்கள் கேட்கலாம்... (இப்பொழுது வாருங்கள்.) அவர் என் இருதயத்தில் ஜீவிக்கிறார். இப்பொழுது, ஒவ்வொருவரும் உங்களால் இயன்ற மட்டும் சத்தமாகப் (பாடுங்கள்). அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், கிறிஸ்து இயேசு இன்றும் ஜீவிக்கிறார்! ஜீவியத்தின் இடுக்கமான பதைகளினூடாக அவர் என்னோடு நடந்து கொண்டே பேசுகிறார். அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், இரட்சிப்பை அருளுகிறார்! எனக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம்... (இப்பொழுது உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள்.) அவர் என் இருதயத்தில் ஜீவிக்கிறார். 9. உங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டிருக்கும் யாரோ ஒருவருடன் கரங்களை குலுக்கி, 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுங்கள். நீங்கள் எல்லாரும் கிறிஸ்தவர்க ளாயிருக்கிறீர்கள். நீங்கள் சக பிரஜைகளாயிருக்கிறீர்கள். ஓ, என்னே. அது உங்களை நலமாக உணரச்செய்யவில்லையா? கடந்த காலம் எல்லாம் மறக்கப்பட்டு போயிற்று, அதெல்லாம் முடிந்து விட்டது. அதைச் செய்தது யார்? அவர் ஜீவிக்கிறார், அவரே அதைச் செய்தார். யார் செய்தது? கிறிஸ்துவே. இப்பொழுது, நாம் இதை மீண்டும் நம்முடைய உச்ச குரலில் பாடுவோம். அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், கிறிஸ்து இயேசு இன்றும் ஜீவிக்கிறார்! (எல்லா பயமும் போய் விட்டது!) ஜீவியத்தின் இடுக்கமான பதைகளினூடாக அவர் என்னோடு ... என்னோடு பேசுகிறார். அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், இரட்சிப்பை அருளுகிறார்! எனக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம்... (இப்பொழுது உற்சாகத்தோடு.) அவர் என் இருதயத்தில் ஜீவிக்கிறார். 10. ஓ, என்னே. அது அற்புதம் அல்லவா? எப்படியேனும், வேறொரு தடவை, அது அப்படியே இந்தக் காலையில் எனக்கு ஒரு விசேஷமான சத்தமாக இருக்கிறது. உங்களுடைய சத்தங்களெல்லால் ஒன்றாகக் கலந்துள்ளன, சத்தங்கள் முகவும் அருமையாக உள்ளன. நீங்கள் அதைக் கவனித்தீர்களா? அது உண்மையாகவே உங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்தே வருகிறது என்பது போல் தோன்றுகிறது. கடந்த காலத்தின் கவலைகள் இப்பொழுது போய் விட்டன. உயிர்த்தெழுதலானது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார், அவர் ஜீவிக்கிறார், நான் அவரோடு ஜீவிக்கிறேன். ஆமென். அவர் நமக்குத் தோன்றி, வழியெல்லாம் நம்மோடு பேசுகிறார்; தரிசனங்களையும், கடந்து போன காரியங்களையும், வரப்போகிற காரியங்களையும் நமக்குக் காண்பிக்கிறார். அவர் நம்முடைய வியாதிகளை சுகப்படுத்தி, நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறார். அவர் நமக்கு சமாதானத்தைத் தருகிறார். மரணமானது முகத்தை நோக்கி உற்றுப்பார்க்கும் போது, நாம், 'எந்த பொல்லாப்புக்கும் பயப்படேன், தேவரீர் என்னோடே இருக்கிறீர்' என்று உரத்த சத்தமிடுகிறோம். நான் அதை எவ்வளவாய் நேசிக்கிறேன்! 'ஓ, மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? நான் ஜெயத்தின் மேல் ஜெயமெடுக்கப் போகிறேன்.' மரணம் ஜெயமாயிருக்கிறதா? முற்றிலுமாக, மரணம் ஒரு ஜெயமாயுள்ளது. ஆமென். இப்பொழுது, மரணம் ஒரு ஜெயமே, அது ஒரு துயரமல்ல. அது, நல்லது, அது ஒரு ஜெயமாக உள்ளது. ஆமென். நான்... பவுல், 'அந்தக் காரியங்களைப் பின்னால் தள்ளிவிட்டு, பரம அழைப்பின் இலக்கை நோக்கித் தொடருகிறேன்' என்றான். ஆமென். அவர்கள் அவனுடைய தலையை வெட்டும்படி ரோமாபுரியில் தயாராயிருந்த போது, அவன் 'நான் நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதி பதியாகிய கர்த்தர் அவருடைய பிரசன்னமாகுதலிலே அதை எனக்குத் தந்தருளுவார்: எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்' என்று கூறினான். 11. அவர் இன்று வருவதைக் காண நீங்கள் விரும்புகிறீர்களா? (சபையார், 'ஆம்' என்று கூறுகின்றனர் - ஆசிரியர்.) நீங்கள் அவரைக் காண விரும்புவீர்களா? நாம் அவரை சமாதானத்தோடே சந்திக்கும் போது - சற்று சிந்தித்துப் பாருங்கள், இந்தப் பழைய அற்பமான சரீரங்களோடு அங்கே நின்று கொண்டிருப்போம். ஒருக்கால்... அவர்கள் ஒருக்கால் வாலிபமாகவும், வாலிப வயதினராகவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் வயது சென்றவர்களாக ஆகப்போகிறார்கள். நரை மயிர்களும்... பல்லும் போய் விடும், கண்பார்வை மங்கிப்போய் விடும், தோள்கள் தொங்கி விடும். ஆனால் இங்கே இந்தத் திரைக்கப்பால், அங்கே ஒரு புத்தம் புதிய மனிதன் நிற்கிறான். இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்து போகும் போது, நாம் அவ்விதமான புதிய சரீரத்திற்குள் நுழைந்து விடுவோம். (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய விரல்களைச் சொடுக்குகிறார் - ஆசிரியர்.) நிச்சயமாக. அவர் ஜீவிக்கிறார்; நாமும் கூட ஜீவிக்கிறோம். நாம் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையில் ஜீவிக்கிறோம். அவர் இக்காலையில் நம்முடைய முகங்களைத் திருப்பி, அந்தத் திரையை இழுத்து, நமக்குக் காண்பித்தால், அப்போது அதற்கு மேலும் விசுவாசம் இருக்காது. நாம் இப்பொழுது வெறுமனே அதை விசுவாசிக்கிறோம். வேறொரு உலகத்திலிருந்து மகிமையின் எதிரொலிகள் நம்முடைய ஆத்துமாவுக்குள் அசைந்து வந்து, 'அது உண்மை! அது உண்மை! பரம அழைப்பின் இலக்கை நோக்கித் தொடர்ந்து செல்!' என்று சுட்டிக்காட்டுவதை நாம் உணர்ந்து கொள்கிறோம். என்னவொரு அற்புதமான நேரம்! ஆமென். ஓ, அவர் மிகவும் தத்ரூபமாய் இருக்கிறார்! 12. இப்பொழுது, சபையாரே, இது ஏறக்குறைய ஆராதனை முடிகிற நேரம். நீங்கள் உங்களுடைய காலை உணவைப் புசித்து விட்டு, ஆராதனையைத் தொடருவதற்காக திரும்பி வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நான் இன்று அதனுடைய ஓரத்தைத் தொட்டிருக்கிறேன், நான்... உயிர்த்தெழுதலை தொட்டிருக்கிறேன். ஆனால் இந்தக் காலையில், ஏறக்குறைய இரண்டு மணி நேரம் இருந்திருக்கிறோம்; நான் இப்பொழுது வீட்டிற்குச் சென்று ஜெபம் செய்வதற்காக என்னை நானே அடைத்துக் கொள்ள விரும்புகிறேன், தேவன் இன்று ஒரு அசலான, அசலான ஜெப வரிசையை நமக்குத் தர வேண்டும் என்று நான் - நான் ஜெபிக்கிறேன். அதன்பிறகு சிறிது கழிந்து இப்பொழுதிலிருந்து ஏறக்குறைய இரண்டு மணி நேரம் மேலேறிச் செல்லுதல் (ascension) என்பதன் பேரில் நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். அவர் மேலேறிச் சென்ற போது, அவர் என்ன செய்தார் என்பதன் பேரில் பிரசங்கிக்க விரும்புகிறேன். அவர் அந்தக் கிரயத்தோடு இங்கே என்ன செய்தார் என்று நாம் காண்கிறோம், அவர் மேலேறிச் சென்ற போது, அவர் என்ன செய்தார் என்பதையும், தேவன் அவரைக் கொண்டு என்ன செய்தார் என்பதையும், அவர் இன்று என்னவாயிருக்கிறார் என்பதையும் காண நாம் இப்பொழுது விரும்புகிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது. யாவரும் உயிர்த்தெழுதலை உணருகிறீர்களா? நீங்கள் உங்களுடைய இருதயத்தில் உயிர்த்தெழுதலை உணருகிறீர்களா? சரி. நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். சகோதரன் நெவில் அவர்களே, நாம் நம்முடைய தலைகளை வணங்குகையில், நீர் விரும்பினால், ஒரு ஜெபம் செய்து நீர் எங்களை அனுப்புவீரா என்று நான் வியப்படைகிறேன். சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 2